ETV Bharat / city

'செல்லாது... செல்லாது': அறநிலைய ஆணையருக்குப்போட்ட Fine-க்கு இடைக்காலத்தடை! - நீதிபதி அனிதா சுமந்த்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு தடை

author img

By

Published : Aug 10, 2022, 7:40 PM IST

Updated : Aug 10, 2022, 9:11 PM IST

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி, சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும்,

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி, அறநிலையத்துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் இன்று(ஆக.10) விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், பிரதான வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத நிலையில், தனக்கு எதிராக தனி நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது தவறு என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தனக்கு எதிராக குற்றச்சாட்டு இல்லை என்பதால், அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்து, மேல் முறையீட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோச்சடையான் பட வழக்கு - லதா ரஜினிகாந்த் மீதான சில மோசடி குற்றச்சாட்டுகள் ரத்து!

Last Updated : Aug 10, 2022, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.