ETV Bharat / city

மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் - காவல் ஆணையர் - காவல் ஆணையர்

சென்னை: மணலியில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டை 2, 3 நாட்களில் அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

nitrate
nitrate
author img

By

Published : Aug 10, 2020, 12:47 PM IST

லெபனானில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நிகழ்ந்த பெரும் விபத்தின் எதிரொலியாக, சென்னை மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை, கிடங்கில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 10 கண்டெய்னர்களில் அமோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “மணலியில் எஞ்சியுள்ள 27 கண்டெய்னர் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை, 2, 3 நாட்களில் அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கு தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அப்பகுதி மக்கள் அச்சமின்றி இருக்கலாம் “ என்றார்.

மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் - காவல் ஆணையர்

மேலும் மக்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த காவல் ஆணையர், “வீடியோ கால் மூலமாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே வீடியோ கால் மூலம், உடனடியாக புகார்கள் அளித்து வருகின்றனர். இவ்வசதி பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்; நகருக்கு ஆபத்தா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.