ETV Bharat / city

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டம்! - அயோத்தி தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டம்

அயோத்தி தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆயிரக்கணக்கானோர் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

popular front of india protest
author img

By

Published : Nov 15, 2019, 11:53 PM IST

கடந்த 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கான தீர்ப்பை வழங்கியது. அது ஒரு சார்பாக அமைந்துள்ளதாகவும் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகவும் பாபர் மசூதி தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி எனக் கூறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:

தென்காசி பேருந்து நிலையம் முன்பு பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் திப்புசுல்தான் முன்னிலை விகித்தார். இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தென்காசி நகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர எல்லைக்குள் நுழைய முடியாதபடி, அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

விருதுநகர்:

அதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை:
அதிராம்பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஊர்லமாக கோஷம் எழுப்பியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை:
அறிவொளி பூங்கா அருகே அனுமதியின்றி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் அதிகமான நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு:
கருங்கல்பாளையத்தில் பாபர் மசூதி வழக்கை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கொட்டும் மழையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம்

திருவாரூர்:
கூத்தாநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பாஜக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கங்களை எழுப்பி, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி:
கம்பம் தலைமை தபால் நிலையம் அருகே காவல்துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டு தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்:

சிதம்பரம் காந்தி சிலை அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்வதை அறிந்து, வெளியூர்களில் இருந்து வேன்களில் வந்த இஸ்லாமிய அமைப்பினர், வண்டிகேட் என்ற பகுதியில் வேனை விட்டு கீழே இறங்கி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

நாகை:
மயிலாடுதுறை விஜயா திரையரங்கு முன்பு தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள மணிக்கூண்டு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அப்துல் லத்தீஃப் பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 குழந்தைகள், 20 பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்:
விழுப்புரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முகமது வழிகாட்டுதல்படி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் அபுபக்கர் இமாம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாஜூதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படியுங்க: சேலத்தில் அயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டம்!

Intro:அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளிப்பதை கண்டித்து புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 30க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்

Body:புதுச்சேரி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளிப்பதை கண்டித்து புதுச்சேரியில் பேருந்து நிலையம் அருகில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர் ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை இதற்கிடையே தடையை மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவலறிந்த போலீசார் பேருந்து நிலையம் அருகே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது திடீரென அங்கு திரண்டு 30க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்

Conclusion:அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளிப்பதை கண்டித்து புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 30க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.