ETV Bharat / city

அயோத்தி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - திருமுருகன் காந்தி - Ayodhya verdict

சென்னை: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அயோத்தி தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

Ayodhya verdict disappoints says Thirumurugan Gandhi
author img

By

Published : Nov 10, 2019, 10:13 AM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. 27 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றாலும்கூட அது அனைத்து மக்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததாக வரலாறு இல்லை. அதை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரமும் இல்லை. வால்மீகி ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார். அதனால் அது வெகுஜன மக்களிடம் போய் சேரவில்லை. அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர் துளசிதாசர். முகலாய சக்கரவர்த்தியான அக்பர் துளசிதாசரை அழைத்து அவரை புகழ்ந்து கவிதை பாடியுள்ளார்.

மேலும் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு துளசிதாசர் அயோத்தியில் அனுமன் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதன்பிறகு அக்பர் அனுமன் கோயிலுக்கு நிலத்தை ஒதுக்கியயுள்ளார். இன்றும் அந்தக் கோயில் துளசிதாசர் பெயரில் அங்கு இருக்கிறது. அயோத்தியில் ராமர் வாழ்ந்திருந்தால் அதே இடத்தை துளசிதாசர் ஏன் அக்பரிடத்தில் கேட்கவில்லை.

அவர் மட்டுமல்ல அவருக்கு பின்னால் வந்த அறிஞர்கள் கபீர், குரு நானக் போன்றவர்களும் அதை கேட்கவில்லை. பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் வந்தபோதும் ஆர்ய சமாஜமும் அந்த இடத்தை கேட்கவில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துகின்ற விவேகானந்தரும் அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

அதன்பிறகு இந்தக் கோரிக்கையை வலியுத்தியது பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்தான். அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது அமைப்பின் நோக்கமே தவிர அது வெகுஜன மக்களின் நோக்கமல்ல. மக்களின் வழிபாட்டு தலங்களை, நம்பிக்கைகளை சிதைத்து எதையும் நிலைநிறுத்த வேண்டாம் என்று தன் மகனுக்கு பாபர் உயில் எழுதினார்.

வழிபாட்டுத் தலங்களை சிதைக்க வேண்டாம் என்று கூறிய பாபர், ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டியிருப்பாரா? என்ற சந்தேகங்களை வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். 400 வருடங்கள் பழமையான மசூதியை வன்முறை மூலம் அடித்து நொறுக்கினார்கள். அதற்கு எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை.

எந்தவித வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல் அரசு ஆவணங்களும் இல்லாமல் இன்னொருவரின் நிலத்தை வன்முறையின் மூலம் கைப்பற்றிக் கொள்ள முடியுமா என்பதே எங்களின் கேள்வி. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. மேலும் அங்கு புதைந்துபோன கட்டிடங்களுக்கான ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. அப்படி இருக்கும்போது தீர்ப்பு தொல்லியல் துறையின் அடிப்படையில் வழங்கப்படவும் இல்லை.

உதாரணத்துக்கு இங்கு ரிப்பன் கட்டடம் உள்ளது. அது ஆங்கிலேயரின் கட்டடம். அதற்கு கீழே பழைய காலத்து கட்டடம் இருக்கிறது என்று கூறி அதை இடித்து கைப்பற்ற முடியாது. அதை ஏற்றுக்கொள்வீர்களா. வரலாற்றில் பழி வாங்கமுடியாது.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி

வரலாற்றில் பின்நோக்கி போய் பழிவாங்க ஆரம்பித்தால் தாலிபன்கள் பாமியானில் இருக்ககூடிய புத்தர் சிலையை உடைத்தது நியாயம் என்றாகிவிடாதா? சமகாலத்தில் இருக்கின்ற வாழ்க்கையைதான் வாழ முடியும்.

ஐ.எஸ். அமைப்பும் சிரியாவில் பல கட்டிடங்களை இடித்துள்ளனர். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாபர் மசூதி இடித்த குற்றத்தை இந்த தீர்ப்பு நியாயப்படுத்தி விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கேள்விகளை வாக்கு வங்கி அரசியலில் இருக்கின்ற அனைத்து தலைவர்களும் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: சிறை செல்ல அச்சப்படுவதற்கு நாங்கள் ஹெச்.ராஜா இல்லை: திருமுருகன் காந்தி!

Intro:Body:மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமனறம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த தீர்ப்பு வெளியாகிவுள்ளது. 27 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படௌடுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றாலும்கூட அது அனைத்து மக்களையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததாக வரலாறு இல்லை. அதை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரமும் இல்லை. வால்மிகி ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார். அதனால் அது வெகுஜன மக்களிடம் போய் சேரவில்லை. அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர் துளசிதாசர்.

முகலாயை சக்கரவர்த்தியான அக்பர் துளசிதாசரை அழைத்து அவரை புகழ்ந்து கவிதை பாடியுள்ளார். மேலும் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு துளசிதாசர் அயோத்தியில் அனுமன் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதன்பிறகு அக்பர் அனுமன் கோயிலுக்கு நிலத்தை ஒதுக்கியயுள்ளார். இன்றும் அந்தக் கோயில் துளசிதாசர் பெயரில் அங்கு இருக்கிறது. அயோத்தியில் ராமர் வாழ்ந்திருந்தால் அநேத இடத்தை துளசிதாசர் ஏன் அக்பரிடத்தில் கேட்கவில்லை. அவர் மட்டுமல்ல அவருக்கு பின்னால் வந்த அறிஞர்கள் கபீர், குரு நானக் போன்றவர்களும் அதை கேட்கவில்லை.

பின்னர் பிரிட்டிஷ் அரசாங்ம் வந்தபோதும் ஆர்ய சமாஜமும் அந்த இடத்தை கேட்கவில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துகின்ற விவேகானந்தரும் அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதன்பிறகு இந்த கோரிக்கையை வலியுத்தியது பா.ஜ.க வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்தான். அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது அமைப்பின் நோக்கமே தவிர அது வெகுஜன மக்களின் நோக்கமல்ல.

மக்களின் வழிபாட்டு தலங்களை, நம்பிக்கைகளை சிதைத்து எதையும் நிலைநிறுத்த வேண்டாம் என்று தன் மகனுக்கு பாபர் உயில் எழுதினார். வழிபாட்டு தலங்களை சிதைக்க வேண்டாம் என்று கூறிய பாபரா ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டியிருப்பார் என்ற சந்தேகங்களை வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

400 வருடங்கள் பழமையான மசூதியை வன்முறை மூலம் அடித்து நொறுக்கினார்கள். அதற்கு எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை. எந்தவித வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல் அரசு ஆவணங்களும் இல்லாமல் இன்னொருவரின் நிலத்தை வன்முறையின் மூலம் கைப்பற்றி கொள்ள முடியுமா என்பதே எங்களின் கேள்வி.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. மேலும் அங்கு புதைந்துபோன கட்டிடங்களுக்கான ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. அப்படி இருக்கும்போது தீர்ப்பு தொல்லியல் துறையின் அடிப்படையில் வழங்கப்படவும் இல்லை.

உதாரணத்துக்கு இங்கு ரிப்பான் கட்டிடம் உள்ளது. அது ஆங்கிலேயரின் கட்டிடம். அதற்கு கீழே பழைய காலத்து கட்டிடம் இருக்கிறது என்று கூறி அதை இடித்து கைப்பற்ற முடியாது. அதை ஏற்றுக்கொள்வீர்களா. வரலாற்றில் பழி வாங்கமுடியாது. வரலாற்றில் பின்நோக்கி போய் பழிவாங்க ஆரம்பித்தால் தாலிபன்கள் பாமியானில் இருக்ககூடிய புத்தர் சிலையை உடைத்தது நியாயம் என்றாகிவிடாதா. சமகாலத்தில் இருக்கின்ற வாழ்க்கையைதான் வாழ முடியும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் சிரியாவில் பல கட்டிடங்களை இடித்துள்ளனர். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாபர் மசூதி இடித்த குற்றத்தை இந்த தீர்ப்பு நியாயப்படுத்தி விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இந்த கேள்விகளை வாக்கு வங்கி அரசியலில் இருக்கின்ற அனைத்து தலைவர்களும் பேச வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.