சென்னை ஆவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் அயப்பாக்கம் ஏரியை ஒட்டி அம்பத்தூர் திருவேற்காடு சாலை பிரிகிறது. இவ்விடத்தில் ஒரு சிலர் ஏரிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
திருவேற்காடில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கு சொந்தமான சுமார் 25 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து அழ்துளை கிணறு அமைப்பதாக வருவாய்துறைக்கு தகவல் வந்தது. அதன்டிப்படையில் ஆவடி வட்டாட்சியர் சரவணன் உத்தரவின்படி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, சம்பவ இடத்திற்கு சென்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் வருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, திருமுல்லைவாயல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த நிலம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ஒரு கோடியே 25 லட்சம் ஆகும்.