ETV Bharat / city

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்

தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் இருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்
அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்
author img

By

Published : Jun 8, 2022, 7:27 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 31 காவல் ஆய்வாளர்களை நான்கு மண்டலங்களுக்கு பிரித்து பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் இருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மேற்கு மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விக்னேஷ் இரவு காவலில் அயனாவரம் காவல் நிலையத்தில் வைத்திருந்த போது பொறுப்பு அதிகாரியாக செல்வராஜ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விக்னேஷ் கொலை வழக்கில் 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு, தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் செந்தில் குமார் தென்மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்தும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஆவடி காவல் ஆணையரகத்திற்கு கீழ் 3 காவல் ஆய்வாளர்களை இட மாற்றம் செய்தும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு கீழ் 8 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்தும் என மொத்தம் 31 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் கூடிய விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆபரேஷன் கந்துவட்டி" - டிஜிபி அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.