சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது மக்களுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதைப் பயணிகளுக்குத் தெரிவிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புத் தொடர்பான பல்சுவை விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மேலும், நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021இல் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்சுவை விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 'ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை' கலைக்குழுவினருடன் இணைந்து நேற்று (27.03.2021) விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து விமான நிலையம் மெட்ரோ வரை செல்லும் மெட்ரோ ரயிலில் மெல்லிசை விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இந்நிகழ்ச்சியினைக் கண்டு களித்தனர்.
இதையும் படிங்க:ஜனநாயகத்தின் 'வலிமை' ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ளது - விழிப்புணர்வு ஏற்படுத்திய தல ரசிகர்கள்!