ETV Bharat / city

இரண்டு வயதில் அபார ஞாபகத் திறன் - சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆத்மிகா - இந்திய உலக சாதனை

சென்னை ஆவடியில் 2 வயது குழந்தை ஆத்மிகா சாய் வசந்தா தேசிய தலைவர்கள், நாடுகளின் பெயர் உள்ளிட்டவற்றை சரியாகக் கூறி இந்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆத்மிகா
சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆத்மிகா
author img

By

Published : Oct 10, 2021, 9:54 AM IST

சென்னை: நாடு வளர்ந்து வரும் சூழலில் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு திறமைகளுடன் அடியெடுத்து வைக்கின்றன.

அந்த வகையில் சென்னை ஆவடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆதிஷ், ரேகா தம்பதியின் இரண்டு வயது மகள் ஆத்மிகா சாய் வசந்தா அசாத்திய ஞாபகத் திறனுடன் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பெற்றோர் குழந்தையின் திறமையை வெளிக்கொண்டு வர அடிப்படை விஷயங்களை சொல்லி கொடுத்து வருகின்றனர். இதனை எளிதாக கற்றுக்கொள்வதுடன், மனதில் பதிய வைத்துக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்டவராக இவர் வளர்ந்து வருகிறார்.

தேசியத் தலைவர்கள் பெயர், தேசிய கொடியை வைத்து நாடுகளின் பெயர்கள், அறிவியலாளர்கள், கோயில்கள் என அனைத்தையும் கற்றுக்கொண்டு அதனை சரியாக சொல்லி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆத்மிகா இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் நேரில் ஆத்மிகாவிற்கு வழங்கியது.

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆத்மிகா

இரண்டு வயதிலேயே ஞாபக திறனால் உலக சாதனை படைத்துள்ள குழந்தையின் செயலை கண்டு ஆதிஷ் - ரேகா தம்பதியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் சிலம்பம் சுற்றுவது, பக்தி பாடல்கள், தேச பக்தி பாடல்களை பாடுவதில் திறமைமிக்கவர் ஆத்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.