ETV Bharat / city

ஓலா, ஊபருக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!

author img

By

Published : Jan 2, 2020, 7:30 PM IST

சென்னை: ஓலா மற்றும் ஊபர் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு எதிராக வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து ஆட்டோக்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

strike
strike

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க ஆட்டோ பிரிவு மாநிலத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகி அமெரிக்கை நாராயணன் ஆகியோர், ‘பெட்ரோல், டீசல், வாகன எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஓலா, ஊபர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்து, இத்தொழிலை அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம் தேதி தமிழ்நாட்டு, புதுவையில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.

இருசக்கர வாகன டாக்சியை தடுத்து நிறுத்த வேண்டும்

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் அதிக அளவிலான அபராதம் விதிக்கப்படுவதால், மோட்டர் வாகனத் தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இச்சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. மோட்டர் வாகன சட்டப்படி அனுமதி இல்லாத இருசக்கர வாகன டாக்சிக்கு நீதிமன்றமே தடை விதித்த போதும், அவை செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அவ்வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்ளுக்கு காப்பீடும் கிடையாது. மக்களுக்கு பாதுகாப்பில்லாத இருசக்கர வாகன டாக்சியை தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு மஞ்சள் நிற பதிவு எண் தகடு (நம்பர் பிளேட்) மற்றும் சீருடை வழங்க வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்

ஓலா, ஊபர் போன்ற வாடகைக்கார் சேவை மக்களுக்கு தேவைதான் என்றபோதும், அந்நிறுவனங்கள் மக்களையும், ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள். தொடக்கத்தில் பல்வேறு சலுகைகளைக் கொடுத்து மக்களை ஈர்த்த இந்நிறுவனங்கள், தற்போது அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. எனவே, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடை விதித்து, அரசே இத்தொழிலை ஏற்று நடத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தோடு, தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த சுமார் 2.60 லட்சம் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர். இதில் பள்ளி ஆட்டோக்கள் உட்பட எந்த ஆட்டோக்களும் இயங்காது.

ஓலா ஊபரை தடைசெய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் - தொழிற்சங்கங்கள்

இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து ஆட்டோ நிறுத்தங்களிலும் கோலம் போடும் போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறினர்.

இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு

Intro:Body:
ஒலா, ஊபருக்கு எதிராக ஜன. 8 ஆட்டோ ஸ்டிரைக்

சென்னை:

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு ஆட்டோ பிரிவு மாநில தலைவர் எஸ்.பாலசுப்பரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் ஆகியோர் கூறியதாவது-

பெட்ரோல், டீசல், வாகன எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஓலா ஊபர் ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்து, இந்த தொழிலை அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் அதிக அளவிலான அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் மோட்டர் வாகன தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. மோட்டர் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகன டாக்சிக்கு அனுமதி கிடையாது, இதற்கு நீதிமன்றம் தடை விதித்த போதிலும், இருசக்கர வாகன டாக்சி செயல்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் மக்களுக்கு காப்பீடு கிடையாது. மக்களுக்கு பாதுகாப்பில்லாத இருசக்கர வாகன டாக்சியை தடுத்து நிறுத்த வேண்டும், அல்லது அவர்களுக்கு மஞ்சள் நிற பதிவு எண் தகடு (நம்பர் பிளேட்) மற்றும் சீருடை வழங்க வேண்டும், ஓலா, ஊபர் போன்ற சேவைகள் மக்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் மக்களையும், ஓட்டுநர்களையும் சுரண்டுகின்ற வகையில் செயல்படுகிறார்கள். தொடக்கத்தில் பல்வேறு சலுகைகள் கொடுத்து மக்களை ஈர்த்த இந்நிறுவனங்கள், தற்போது அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதித்தது, அரசே இந்த தொழிலை ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 2.60 லட்சம் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர். இதில் பள்ளி ஆட்டோக்கள் உட்பட எந்த ஆட்டோகளும் இயங்காது

இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து ஆட்டோ ஸ்டான்டுகளில் கோலம் போடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Conclusion:visual in wrap
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.