தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 8 வகுப்பு வரை காலையிலும், 9 முதல் 12 வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த யோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:'10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக சந்தேகமா, இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க'