இன்றைய (ஆகஸ்ட் 23) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு நான்கு ரூபாய் குறைந்து நான்காயிரத்து 461 ரூபாயாக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. ஆக சவரனுக்கு ரூ.32 குறைந்து, 35 ஆயிரத்து 688-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு நான்காயிரத்து 825 ரூபாயாக நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு 38 ஆயிரத்து 600 ரூபாய் என விற்பனையாகிறது. நேற்றைய (ஆகஸ்ட் 22) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 720 என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமிற்கு பத்து காசுகள் அதிகரித்து ரூ. 66.70ஆக விற்பனையாகிறது. ஆக கிலோ வெள்ளி ரூ. 100 அதிகரித்து 66 ஆயிரத்து 700 ரூபாய் என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் - பேஸ்புக் புதுத்திட்டம்'