மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், அப்பகுதியில் திரண்டிருந்த பாஜக தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாரே நடந்து சென்றார். அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர், பதாகைகளை அமித் ஷாவை நோக்கி வீசினார். அதையறிந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: GoBackAmitShah: கால இன்னும் உள்ள வைக்கல... அதுகுள்ள இப்படியா!