ETV Bharat / city

'As I am attending Valagappu' - பிடிஆரை கலாய்த்த முன்னாள் 'கலகல' அமைச்சர்! - Former minister Jayakumar

'As I am attending Valagappu' என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்.

பிடிஆரை கலாய்த்த முன்னாள் 'கலகல' அமைச்சர்

author img

By

Published : Oct 2, 2021, 2:54 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாரே தவிர கூட்டுப் பொரியல் பற்றி கவலைப்படுவதில்லை எனவும் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பாக ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அங்கு இருந்த காமராஜர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செய்தார்.

காமராஜரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை
காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை

மாணவர்களுக்குப் பொரியல் இல்லை

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ஜெயக்குமார், "ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வளர்ந்தால் தமிழ்நாடு வளரும் என்று பல விஷயங்களை காமராஜர் முன்னெடுத்தார். தொழிற்சாலைகள் கட்டுவது, அணைகள் கட்டுவது, கல்விக்கூடங்கள் கட்டுவது என அடிப்படையான விஷயங்கள் அவரின் சிந்தனையில் உதித்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார்.

திமுக தோழமைக் கட்சியின் கொடியை சில இடங்களில் ஏற்ற முடியவில்லை என்று சொல்கின்றனர். தமிழ்நாட்டில் நிலை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். திருமாவளவன் காவல் துறையினரைக் குறை சொல்கிறார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிப் பேசுவதில்லை. திருமாவின் வீரம் எங்கே சென்றது?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆதி திராவிடர் விடுதியில் ஸ்டாலின் ஆய்வுசெய்கிறார். அங்கு மாணவர்களுக்குப் பொரியல் இல்லை என்பதை ஒருவர் சொல்கிறார், முதலமைச்சர் நன்றி வணக்கம் எனக் கூறுகிறார்.

As I am attending Valagappu Function

ஆய்வின்போது ஏன் பொரியல் கொடுக்கவில்லை என்று அலுவலர்களை ஸ்டாலின் கேட்கவில்லை. தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில்கூட மதிய உணவில் மாணவர்களுக்குப் பொரியல் கொடுக்க வேண்டும் என உள்ளது" என்றார்.

மேலும், "ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் வேண்டும் என்றும், வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் எனவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று எனக்குத் தகவல் வந்தது. அதில் பங்கேற்காமல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

மாணவப் பருவத்தில் விடுப்புக்கு கடிதம் கொடுப்பதுபோல், "As I am attending Valagappu Function. Hence, I am unable to attend. Kindly Pardon me Ma'am" என்று அந்தக் கடிதத்தில் இருந்ததாக எனக்குத் தகவல் வந்தது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசின் நிதியை நேரடியாகப் பெற... அண்ணாமலை கேட்பது அது ஒன்றைத்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.