ETV Bharat / city

ஜெயலலிதா உயிரிழப்பு: 90 விழுக்காடு விசாரணை முடிந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் - ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரிழப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 90 விழுக்காடு முடிந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்
author img

By

Published : Aug 13, 2021, 2:59 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அது சம்பந்தமாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்ந நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருவதாகவும், இதுநாள்வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11ஆவது முறையாக மேலும் ஆறு மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விசாரணை ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 90 விழுக்காடு விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு தடை விதித்துள்ளதால், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: எண்ட் கார்டு இல்லாமல் தொடரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.