சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நிகழ்ச்சிக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆயதப்படை காவலரான செந்தில் குமார், அங்கு வி.வி.ஐ.பி நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இன்று (ஆக. 3) ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவர், தன்னை தானே துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதில், சம்பவ இடத்திலேயே செந்தில் குமார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு உமா என்ற மனைவியும், 1 வயதில் குழந்தையும் உள்ளனர்.
![Police Sucide in Chennai Nehru Stadium](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16002165_suicide.jpg)
சில மாதங்களாக செந்தில் குமாருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. குடும்ப தகராறில் செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து, பெரியமேடு போலீசார், காவலர் செந்தில் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அல்கொய்தா தலைவர் கொலை எதிரொலி - சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு