சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (செப். 9) நடந்தது.
காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பா,"காவல் நிலையம் பக்கமே செல்லாதவன் நான். எந்தப் பரிந்துரைக்காகவும் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் காவல் நிலையத்திற்குச் செல்லக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள், அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை மீறி 'காசு பணம் துட்டு மணி மணி' என்று பாடிக்கொண்டுருந்தவர்களை, பதவியேற்ற மூன்று மாதங்களில் 'குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது' என பாடவைத்துவிட்டார் முதலமைச்சர்
திமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறை, புகழ்பெற்ற ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக உருவாகும்" எனப் பேசினார். மேலும், இது வெறும் டிரைலர் தான் என்றும் மெயின் பிக்சரை பார்க்க பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: கோடநாடு விவகாரம் - முதலமைச்சர் Vs எதிர்க்கட்சித் தலைவர்