ETV Bharat / city

ஏ.ஆர். ரஹ்மானின் தமிழணங்கு ஓவியம் - அமித் ஷாவிற்கு அறைகூவல்! - ரகுமான் எப்போதும் தமிழின் பால் அதிக ஈர்ப்பு உடையவர்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்ற ஓவியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது இந்தி மொழி திணிப்பிற்குப் பதிலளிக்கும் விதத்தில் இந்த ஓவியம் உள்ளது என நெட்டிசன்கள் கருத்துரைத்து வருகின்றனர்.

ஏஆர் ரகுமானின் தமிழணங்கு ஓவியம்- அமித்ஷாவிற்கு அறைகூவல்!
ஏஆர் ரகுமானின் தமிழணங்கு ஓவியம்- அமித்ஷாவிற்குஏஆர் ரகுமானின் தமிழணங்கு ஓவியம்- அமித்ஷாவிற்கு அறைகூவல்! அறைகூவல்!
author img

By

Published : Apr 9, 2022, 10:48 PM IST

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆவார். ரஹ்மான் எப்போதும் தமிழின் பால் அதிக ஈர்ப்பு உடையவர். இயல்பாகவே அவரது இசையிலும், பேச்சிலும் தமிழ் மீது உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும்.

இந்த வரிசையில் தற்போது இந்தி மொழி முக்கியம் குறித்தான கருத்துக்கு எதிராக அவரது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்கர் பெற்றவுடன் 'எல்லா புகழும் இறைவனுக்கே’ எனக்கூறி, தமிழ் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்தினார். சில தினங்களுக்கு முன் டெல்லியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேற்று மாநிலத்தவர்களும் இந்தி மொழியை கற்க வேண்டும், ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான் எனப் பேசிய பேச்சு, பல தரப்புகளில் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் பல பிரபலங்களும் இதற்கு எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமித்ஷாவிற்கு ட்விட்டரில் அறைகூவல்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில் தமிழணக்கு எனப்பெயரிடப்பட்ட தமிழ்த்தாய் ஆக்ரோஷமாக கையில் சூலாதயுத்துடன் தாண்டவம் ஆடுவது போல் காட்சியளிக்கிறார். அந்த ஆயுதத்தின் முனையில் தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’ இடம்பெற்றுள்ளது. அந்தப் படத்தில் கீழே பாரதிதாசனின் தமிழ் போற்றும் வரிகளான, “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஓவியத்தின் மூலம் அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி, பாடலாசிரியர் வைரமுத்து என பலர் இந்தி திணிப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தி எதிர்ப்பின் வரலாறு தெரியுமா..? அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி கண்டனம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.