ETV Bharat / city

கரோனாவை எதிர்க்க அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கையாளும் டெக்னிக்! - சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கரோனாவை எதிர்க்கும் முறை

சென்னை: வெளி நபர்களை உரிய அனுமதி இல்லாமல் உள்ளே விடாமல் கரோனாவை எதிர்த்து வருகின்றனர், சென்னையைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.

வெளி நபர்களை உரிய அனுமதி இல்லாமல் உள்ளே விடாமல் கரோனாவை எதிர்த்து வருகின்றனர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.

author img

By

Published : May 3, 2020, 1:00 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மூன்றாவது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அதிதீவிரமாக கரோனா பரவி வருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அடிக்கடி கை கழுவவேண்டும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்று, தனித்தனி வீடுகளில் இருக்கும் மக்களுக்குப் பரவுவது சற்று குறைவாக இருக்கும். ஆனால், ஒன்றாக வாழும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் ஒருவருக்கு தொற்று பரவினால் கூட, நினைத்ததை விட, வேகமாக ஒட்டுமொத்த மக்களுக்கும் பரவி விடும். எனவே, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றவர்களை விட பாதுகாப்புடன் இருப்பது இன்றியமையாததாகும். இதற்கு முன் உதாரணமாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு விளங்கி வருகிறது.

இது தொடர்பாக டி.வி.ஹெச் பார்க் வில்லா எனப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் தலைமையதிகாரி கிரிதரன் கூறுகையில், 'முதல்கட்ட நடவடிக்கையாக இங்கேயே இருக்கும் குடியிருப்புவாசிகளை கண்டுபிடித்தோம். ஏனென்றால், சிலர் வெளியிலிருந்து நண்பர்கள் அறையில் தங்கி இருப்பார்கள். எனவே, எங்கள் குடியிருப்புவாசிகளை மட்டும் தங்க அறிவுத்தினோம்.

பின்பு 3 நுழைவு வாயில்களை ஒன்றாக மாற்றினோம். பிறகு பால், தண்ணீர் மட்டும் உரிய பாதுகாப்புடன் உள்ளே வர அனுமதிக்கிறோம். மற்றவர்களை உள்ளே அனுப்புவதில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவை மூடிவிட்டோம். எனவே, குழந்தைகள் வெளியில் வருவதில்லை. வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இணையதளம் மூலம் பதிவு செய்து, பின்பு பொருட்களை வாங்க அறிவுறுத்தியுள்ளோம்.

வெளி நபர்களை உரிய அனுமதி இல்லாமல் உள்ளே விடாமல் கரோனாவை எதிர்த்து வருகின்றனர், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.

யார் வெளியில் போய் வந்தாலும், அவர்கள் நுழைவு வாயிலில் கைகளைச் சுத்தம் செய்து உள்ளே வரவேண்டும் எனக் கூறியுள்ளோம்.

மொத்தம் 272 குடியிருப்புகள் உள்ளது. அனைவருக்கும் நேரில் போய் சொல்ல முடியாது. அதனால் எங்கள் குடியிருப்புவாசிகளுக்கு எனத் தனியாக செயலி உள்ளது. அதன்மூலம் தான் அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் குப்பைகளை நாங்களாகவே பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறோம்' எனத் தெரிவித்தார். இது போலத்தான் சென்னையில் உள்ள பலர் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் கரோனாவை எதிர்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:

காவலருக்கு கரோனா: காவலர் குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.