சென்னை குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றிரவு(நவ.05) லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், சென்னை நகர சிறப்புப்பிரிவு ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகர திட்டமிடல் அதிகாரி மாறன் என்பவரிடமிருந்து, சுமார் 1,51,500 ரூபாய் பணம் மற்றும் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் வாகனத்திலிருந்து ரூ.49 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்க காசு ஆகியவை கைப்பற்றபட்டன.
மொத்தத்தில் கணக்கில் வராத சுமார் ரூ.2,00,500 பணம் மற்றும் ஒரு சவரன் தங்க காசு ஆகியவை கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உரியவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீட்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்