சென்னை (Siva Shankar Baba case) : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
பிறகு அவரை சிறையில் அடைத்து வழக்கு விசாரணையானது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக சிவசங்கர் பாபா சிறையில் இருந்து வருகிறார். சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது மொத்தம் 8 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
புதிததாக 2 போக்சோ வழக்குகள்
அதில் ஆறு வழக்குகள் போக்சோ வழக்குகள், தற்போது மேலும் இரண்டு வழக்குகள் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எட்டு வழக்குகளில் இரண்டு போக்சோ வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எட்டு வழக்குகளில் மூன்று போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ஆகியவற்றில் ஜாமீன் பெற்றுள்ளார், சிவசங்கர் பாபா.
90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்குகளில் சிவசங்கர் பாபாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மீதமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
மீதமுள்ள போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வருகிற 4ஆம் தேதி வரை சிவசங்கர் பாபாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசங்கர் பாபா தொடர்ந்த ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி ஆகிக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாராயணசாமி நாயுடு நினைவு தினம்: அரசிற்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்