ETV Bharat / city

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் முக்கிய அறிவிப்புகள்! - மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் புதிய அறிவிப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 34 புதிய அறிவிப்புகளை இன்று(ஏப். 13) வெளியிட்டுள்ளார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் புதிய அறிவிப்புகள்

author img

By

Published : Apr 13, 2022, 9:17 PM IST

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 34 புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அதில் முக்கிய சில...

முக்கிய அறிவிப்புகள்

1. மீன்களை கையாளுவதற்கு பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள், குளிர்பதனக் கிடங்குகள், மீன் அங்காடிகள் அமைத்தல், குளிர் காப்பு வாகனம், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிட 393 பயனாளிகளுக்கு 24 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

2. 169 ஒருங்கிணைந்த நடுத்தர மற்றும் சிறிய அளவிலான வண்ண மீன் வளர்ப்பு மையங்கள் அமைத்திட 6 கோடியே 47 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

3. மீனவர் கூட்டுறவு சங்கங்களை, மீனவர் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

4. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் படகு அணையும் தளம், படகு பழுதுபார்க்கும் தளம் போன்ற கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

5. சென்னை மாவட்டம், நெட்டுகுப்பம் மற்றும் தாழங்குப்பம் ஆகிய கிராமங்களில் 15 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

6. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும்.

7. திருநெல்வேலியில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கும் பணி 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

8. தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடங்கள் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

9. பாரம்பரிய படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகுகள் வாங்கிட 300 மீனவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

10. மீன்பிடி விசைப்படகுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசுபடுத்தாத கழிப்பறைகள் அமைத்திட 20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

11. மீன்பிடி விசைப்படகுகளில் தானியங்கி கடற்கலன் கண்காணிப்பு கருவி பொருத்திட 70 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

12. கடலோர மாவட்டங்களில் உள்ள உவர் நிலப்பரப்புகளில் 100 ஹெக்டேரில் புதிய இறால் பண்ணைகள் அமைத்திடவும், இடுபொருள் வழங்கிடவும் 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

13. சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் செலவில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும்.

14. தமிழ்நாட்டின் நாட்டின மீன்களைப் பாதுகாத்து பெருக்கிட 5 கோடி ரூபாய் செலவில் நாட்டின மீன்குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்படும்.

15. அயிரை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, தேனி மாவட்டத்தில் அயிரை மீன் ஆராய்ச்சி மையம் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: 'Exclusive: திருச்செந்தூர் முருகன் தரிசனம் - நிரந்தரத் தீர்வு கிடைக்குமா?'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.