ETV Bharat / city

தேநீர் விருந்து குறித்த  அண்ணாமலையின் சர்ச்சை கருத்து... ட்விட்டரில் எதிர்வினையாற்றிய பிடிஆர், ஷாநவாஸ், டிஆர்பி ராஜா!

தமிழ்நாட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதனைக் கண்டிக்கும் விதமாக, டீ செலவு மிச்சம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினைகள் எழுந்துள்ளன.

author img

By

Published : Apr 15, 2022, 8:11 PM IST

Updated : Apr 15, 2022, 9:04 PM IST

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த ஆளும் கட்சி-  அண்ணாமலை கருத்துக்கு தொடர்ந்து பதில் கருத்து..

சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தை ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.

மறுகன்னத்தையும் காட்டுவோம்: இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அம்பேத்கர் பிறந்த நாளினை பாஜக மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை வழங்கும் நாளாகக் கொண்டாடி வருகிறது. தொண்டர்கள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகின்றனர்.

அண்ணல் அம்பேத்கரை வைத்துத் தான் அரசியல் செய்ய முடியும் என இருக்கும் தலைவர்களைத் திருத்த முடியாது. அம்பேத்கர் சித்தாந்தத்தை முழுமையாகப் பின்பற்றும் கட்சி பாஜக. ஒரு போதும் வன்முறைக்கு, வன்முறை தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் அளவில் அமைதியின் வழியில் செல்கிறோம்' எனக் கூறினார்.

ஆளுர் ஷாநவாஸ்: அண்ணாமலை கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக விசிக சட்டப்பேரவை உறுப்பினர் ‘டீ செலவு மிச்சமா? ஆளுநர் மாளிகைக்குச் செல்ல ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னைக்கான புறக்கணிப்பை மலிவுப்படுத்தக்கூடாது’ என்று கூறினார்.

நிதி அமைச்சர் பதில் கருத்து: ஆளுர் ஷாநவாஸ் ட்விட்டை ரிட்வீட் செய்த நிதி அமைச்சர் தியாகராஜன், ‘இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்துவிடாதீர்கள், சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது.

  • இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், @aloor_ShaNavas சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம் https://t.co/yRgfzJEdZE

    — Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) April 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்’ எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜுவும் தியாகராஜனின் ட்விட்டை ரீட்விட் செய்து அண்ணாமலைக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கருத்துக்கு ஆளும் கட்சித் தலைவர்கள் பதில் கருத்து அளித்து வருகின்றனர்.

  • என்னவோய் சங்கி எங்க அண்ணன் பில் கேக்குறாரு அப்போ அந்த டீ கூட ரவி சொந்த செலவு இல்லையா🤣🤣🤣

    இருக்குறது சென்னையில
    தின்றது #தமிழ் மக்கள் காசுல

    நாங்க குடுத்த ஒரு வேலை #நீட் மசோதா டெல்லிக்கு அனுப்புறது அதயும் செய்யல
    அப்பறம் என்ன்ன்ன்னா மைசூர் பாக்கு தின்ன டீ காசு மிச்சம்னு கதவிடுற🤣 https://t.co/7gSebFQIRc

    — Dr. T R B Rajaa (@TRBRajaa) April 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:ஆளுநர் நடத்திய தேநீர் விருந்து: ஆளுங்கட்சி புறக்கணிப்பு, எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

Last Updated : Apr 15, 2022, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.