ETV Bharat / city

அண்ணாமலை ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - திமுக சார்பில் நோட்டீஸ் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது.

அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - திமுக சார்பில் நோட்டீஸ்

author img

By

Published : Mar 26, 2022, 4:41 PM IST

சென்னை : அண்ணாமலை மன்னிப்பு கேட்காத நிலையில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாடு வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை, கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பி உள்ளார். அண்ணாமலையின் கருத்திற்கு அவர் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மன்னிப்பு கேட்காத பட்சத்தில் கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார். பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராகத் திகழும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய் கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறினார்.

மோடியின் பயணமும் சொந்த முதலீட்டுக்கா?

அரசு பயணத்தை, சொந்த முதலீடு செய்யப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டும் அண்ணாமலை, அப்போது பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் சொந்த முதலீடு செய்வதற்காக என்ற கேள்வி எழுப்பினார். முதலமைச்சரை இழிவாகப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில் எடுக்கப்படும் சட்டப் போராட்டத்தை அண்ணாமலையால் தாங்க முடியாது எனவும் எச்சரித்தார்.

இதையும் படிங்க:பெட்ரோல் டீசல் விலை 5 நாட்களில் 4ஆவது முறையாக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.