ETV Bharat / city

பிரதமரின் 'மன் கி பாத்' உரையை பொதுமக்கள் கேட்க ஏற்பாடு - அண்ணாமலை

author img

By

Published : Apr 25, 2022, 12:01 PM IST

தமிழ்நாட்டில் பிரதமரின் 'மன் கி பாத்' உரையை பொதுமக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உரையை பொதுமக்கள் கேட்க ஏற்பாடு செய்யவேண்டும்

செங்கல்பட்டு: பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பதவியேற்ற 2014ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இதில் 88ஆவது நிகழ்ச்சியாக நேற்று(ஏப். 24) பிரதமர் மோடி வானொலி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் நெடுங்குன்றம், பாலையா கார்டன் பகுதியில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு, பிரதமரின் உரையை நேரடியாக பொதுமக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன் கி பாத்: இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், "அடுத்த மாதம் நடைபெற உள்ள 'மன் கி பாத்' நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2373 பாஜக கிளைகளிலும் பிரதமரின் உரையை பொதுமக்கள் கேட்க ஏற்பாடு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 67,000 கிளைகளிலும் பிரதமரின் உரையை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சவாலாக 2373 கிளைகளிலும் பிரதமரின் உரையை பொதுமக்களுக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

பிரதமரின் 'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகவே சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் சென்று நிகழ்ச்சி குறித்து எடுத்துக்கூறி அழைத்து வரவேண்டும். பிரதமரின் உரையை தேநீர் கடைகள், வீடுகள், மரத்தடிகளில் பொதுமக்கள் காணும்படி செய்யவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கிராம சபை கூட்டம், வெறும் பேச்சு கூட்டமாக இருக்கக்கூடாது- கமல்ஹாசன்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.