ETV Bharat / city

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி!

author img

By

Published : Feb 27, 2020, 5:24 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

university
university

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் மாணவர்கள் திறன் ஊக்குவிப்பு மையத்தின் சார்பில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு குறித்த கண்காட்சி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

தேசிய அளவிலான இக்கண்காட்சியைக் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் பதுரி, பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பாஸ்கரன், ”மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி இன்று முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் மாணவர்களின் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைகழக மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி!

மாணவர்கள் கண்டுபிடித்த 189 புதிய கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்கவும், தொழில்திறனை வளர்க்கவும் இது பயனுள்ளதாக அமையும். கண்டுபிடிப்புகளை உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் ஆய்வுசெய்து பரிசு வழங்கவுள்ளனர்“ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிப் படிப்புக்குப் பின்னர் என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டிய மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.