அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அருள் அறம், செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவை கடந்த 42 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.. பல்கலைக்கழகத்தின் பெயரில் தரவரிசை, ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சிக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
![அரசுக்கு அறிவுரை கூறுங்கள் - ஆளுநருக்கு ஆசிரியர்கள் கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-auta-letter-governor-script-7204807_29092020135449_2909f_1601367889_979.jpg)
ஆனால், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றுவதால் காப்புரிமை போன்றவை பாதிக்கப்படும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கருதுகின்றனர். எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது. புதியதாக ஆரம்பிக்கப்படும் பல்கலைக் கழகத்திற்கு வேறு பெயரை வைத்துக் கொள்ளட்டும். எனவே, இதுகுறித்து ஆளுநர் அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் ” என அதில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வலியுறுத்தல்!