சென்னை: Graduation Ceremony: பொறியியல் மாணவர்களுக்கான தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாகப் படித்து அதிக மதிப்பெண் பெற்று பதக்கம் மற்றும் பரிசுகளைப் பெறும் மாணவர்களின் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
331 பேருக்குப் பட்டம்
பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
B.Arch., பிரிவில் 52 பேரும், B.E., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 42 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 50 பேரும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 52 பேரும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், ஆட்டோ மொபைல் பிரிவில் 32 பேரும், Civil, CSE, EEE பிரிவுகளில் தலா 51 பேரும், ECE பிரிவில் 52 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
அதிகம் இடம்பிடித்த தனியார் கல்லூரி மாணவர்கள்
இதர பாடப்பிரிவுகளில் 264 பேர் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், MCA பிரிவில் 57 பேரும், MBA பிரிவில் 53 பேரும், M.E., பிரிவில் 110 பேரும், M.Tech., பிரிவில் 6 பேரும், M.Arch., பிரிவில் 9 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் தனியார் கல்லூரி மாணவர்களே அதிகம் இடம்பிடித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலேயே இடம் பிடித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களுக்குத் தமிழ்நாடு ஆளுநர் படங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பிப்பார்.
இதற்குரிய தேதியினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு 8ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு!