ETV Bharat / city

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் - tamilnadu news

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணி
உதவி பேராசிரியர் பணி
author img

By

Published : Oct 12, 2021, 2:46 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி நூலகர், பேராசிரியர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறை இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர், நூலகர் ஆகிய பணிகளில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 7-ஆவது சம்பளக்குழுவின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://aurecruitment.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு வரும் 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களை அறிய, www.annauniv.edu அல்லது https://aurecruitment.annauniv.edu/ என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.