சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையில் உள்ள இந்த மேம்பாலம், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து குறைவாக இருக்கும் இரவு நேரங்களில் சிலர் இம்மேம்பாலத்தில் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாகச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததன் அப்படையில் இரவு நேரங்களில் அண்ணா மேம்பாலம் மூடப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சர்வீஸ் ரோடு வழியாகச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் சிலருக்காக, போக்குவரத்து விதிகளை மதிக்கும் பலர் பாதிக்கப்படக் கூடாது என முடிவெடுத்து, அண்ணா மேம்பாலத்தை இரவு நேரத்திலும் திறக்க சென்னை போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், சர்வீஸ் ரோடு வழியாகச் செல்லும்போது மக்கள் வழி தெரியாமல் தடுமாறுவதைத் தடுக்கும் பொருட்டும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, மேம்பாலத்தில் இரவு நேர பாதுகாப்புப் பணியில் காவலர்கள் நிறுத்தப்படவுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'லில்லிய கண்டுபிடிச்சு தந்தா ரூ.10 ஆயிரம்' - நாய்க்குட்டி உரிமையாளர் விளம்பரம்