ETV Bharat / city

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திரா! ஓபிஎஸ் கண்டனம்

பாலாற்றில் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்களை கட்ட நடவடிக்கை எடுக்கும் ஆந்திர அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாலாற்றில் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க தடுப்பணை கட்டும் ஆந்திரா! ஓபிஎஸ் கண்டனம்

author img

By

Published : Sep 27, 2022, 11:54 AM IST

சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர்,திருவண்ணாமலை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும்,விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பாலாற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவைக் குறைக்கும் வகையில்,அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அம்மாநில முதலமைச்சர் பேசியுள்ளது தமிழ்நாட்டு மக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சனை மற்றும் மேகதாது பிரச்சனை,கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைத்துக் கொள்வதில் உள்ள 'ரூல் கர்வ்' பிரச்சனை என்ற வரிசையில் தற்போது பாலாற்றில் ஆந்திர மாநிலத்தோடு புது பிரச்சனை எழுந்திருக்கிறது.

சமீபத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர், பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும், குடிப்பள்ளியில் 0.77 டி.எம்.சி. மற்றும் சாந்திபுரத்தில் 0.33 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி இருக்கிறார்.

இது ஊடகங்களில் செய்தியாக வெளி வந்துள்ளது. பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகி, செங்கல்பட்டு அருகில் வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழ்நாடு நதிகளிலேயே பாலாற்றில்தான் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது கர்நாடகாவில் சுமார் 93 கிலோ மீட்டர் தூரமும்,ஆந்திர பகுதியில் 33 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது.தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தூரம் பாலாறு பயணிக்கிறது.

வேலூர்,திருவண்ணாமலை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு உயிர் நாடியாக பல்வேறு வகைகளில் விளங்குகிறது.விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி ஆகியவை பாலாற்றின் வழியாகத் தான் அந்தந்த மாவட்ட மக்களுக்கு கிடைக்கிறது.கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான்.

இது குறித்து நீர்வளத் துறை அமைச்சர் ல் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,அது ஒரு பொதுக் கூட்ட செய்தி என்றும்,முன்னர் ஒரு முறை கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக செய்தி வந்தது என்றும்,ஆனால் நேரில் பார்த்தபோது அணை கட்டுவதற்கான அறிகுறி அங்கு இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை.இதன் அடிப்படையிலும்,கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டது போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதன் அடிப்படையிலும் இந்தப் பிரச்சனையை நான் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

மேலும்,இது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல,ஆந்திர முதலமைச்சரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது.இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

ஆந்திர மாநில முதலமைச்சருடன் நல்லுறவு வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து அவருடன் பேசி,மேற்படி இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில்,பாலாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிப்பதையும், குடிப்பள்ளி மற்றும் சாந்திபுரத்தில் இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட இருப்பதையும் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை...வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு... எடப்பாடி பழனிச்சாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.