ETV Bharat / city

அக்டோபரில் இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

author img

By

Published : Sep 27, 2020, 8:30 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதி பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss Press Realease
Anbumani Ramadoss Press Realease

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மழைக்கால பருவப் படிப்புகளில் சேர தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இறுதி பருவத் தேர்வு இல்லாமல், அதற்கு முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கிடைத்துள்ளது.

அவர்கள் முதல் பருவத்திற்கான கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தி விட்டனர். அக்டோபர் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர்கள் இறுதி பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்காலிக பட்டச் சான்றிதழ்களை (Provisional Certificate) தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு விடும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதி பருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் இம்மாத இறுதிக்குள்ளாகவும், சில பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதத் தொடக்கத்திலும் இறுதி பருவத் தேர்வுகள் நிறைவடைய உள்ளன.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் அமையும்.

ஒருவேளை அக்டோபர் 5ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிட முடியாதவையாகும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர்கள் நடப்பு பருவத்தில் சேரத் தவறினால் ஓராண்டு படிப்பை இழக்க நேரிடும்.

மேலும் அடுத்த ஆண்டில் புதிதாக பட்டம் பெறுவோருக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இப்போது உயர்கல்வி கற்க வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு இந்த வாய்ப்பு மறுக்கப்படலாம். அதனால் அவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடக் கூடும்.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாடுகளின் வங்கிகளில் கணக்குத் தொடங்கி ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி வைப்பீடு செய்துள்ளனர்.

அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். இதற்கெல்லாம் மேலாக அனைத்து மாணவர்களும் முதல் பருவக் கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.

இடம் கிடைத்த மாணவர்கள் குறித்த காலத்திற்குள் சேரவில்லை என்றால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாமல் போய்விடும்.

அதேபோல், உயர்கல்வி கற்பதற்காக ஆக்ஸ்போர்டின் கிளாரிண்டன் உதவித்தொகை (Clarendon Scholarship of Oxford), ஈராஸ்மஸ் முண்டஸ் ஐரோப்பிய ஒன்றிய உதவித்தொகை (Erasmus Mundus scholarship of EU), அடிலெய்ட் (Adelaide Scholarship of Australia) போன்ற கல்வி உதவித்தொகைகளை இழக்க நேரிடும். இதுபோன்ற இழப்புகளை பல ஏழை மாணவர்களின் குடும்பங்களால் தாங்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதி பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.

தற்காலிக பட்டச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

அதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.