சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் யானை. இந்த திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகியது. பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்சன், சென்டிமென்ட், காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது. இது தவிர, அருண் விஜயின் நடிப்பு, ஜி.வி. பிரகாஷ் குமாரின் மயக்கும் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.
ஆக.19 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. குறுகிய காலத்தில் சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்து ஜீ5 ஓடிடி தளம் தரப்பில் “ஜீ5 இல், எங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அவர்களுக்கு விருப்பமான மொழியில் பிரபலமான படைப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.
சிறந்த படைப்புகளை வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் முழுக்கவனத்தை செலுத்துகிறோம். யானை ஒரு தனித்துவமான கமர்ஷியல் படம். குறுகிய காலத்திற்குள் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. இந்த வெற்றி எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்க எங்களை ஊக்குவித்துள்ளது.
ஜீ5 தளம் ஏற்கனவே சிறந்த உள்ளடக்கம் கொண்ட ஒரிஜினல் தொடர்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களின் பரவலான வரிசைகளை கொண்டுள்ளது. தற்போது 'யானை' படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது.
ஜீ5 மலிவு விலையில் சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதில் அதன் நிபுணத்துவத்திற்காக குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விலங்கு, ஆனந்தம், ஃபிங்கர்டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என பல்வேறு ஜானர்களில் அசல் தொடர்களை உருவாக்கி வழங்குவதில் தனது சிறந்த திறனை நிரூபித்துள்ளது.
‘யானை’ யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜீ5 அதன் ஒரிஜினல் மற்றும் புதிய திரைப்படங்களின் அடுத்த வரிசைகளை விரைவில் வெளியிடவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரத்தான தனுஷின் திருச்சிற்றம்பலம் காட்சி.. முகப்பு கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்