சென்னை: சென்னை வியாசர்பாடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வட்ட செயலாளரை 8 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடி மூன்றாவது பள்ளம் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் வயது (47). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் வட்ட செயலாளராக இருந்து வருகிறார். தேர்தல் பரப்புரைகளை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் வந்து அமர்ந்து இருந்தபோது திடீரென வந்த 8 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் யுவராஜை தாக்க முற்பட்டது.
![வியாசர்பாடியில் அமமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு அமமுக அரிவாள் வெட்டு வியாசர்பாடி காவலர்கள் சிசிடிவி AMMK Functionary hacked in Vyasarpadi Vyasarpadi AMMK AMMK Functionary hacked](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ammkassault-script-7202290_20032021084548_2003f_1616210148_470.jpg)
இதில், சுதாரித்த யுவராஜ் அங்கிருந்து எழுந்து சென்றார். அப்போது அக்கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யுவராஜின் தலையில் வெட்டி உள்ளனர். இந்நிலையில், யுவராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது சகோதரர் வழக்கறிஞரான கோவர்தன்(39) தடுக்க முற்பட்டபோது அவரையும் மண்டையில் வெட்டிவிட்டு எட்டு பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது.
இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து காவலருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி காவலர்கள் சிசிடிவி கேமராவின் காட்சிகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![வியாசர்பாடியில் அமமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு அமமுக அரிவாள் வெட்டு வியாசர்பாடி காவலர்கள் சிசிடிவி AMMK Functionary hacked in Vyasarpadi Vyasarpadi AMMK AMMK Functionary hacked](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ammkassault-script-7202290_20032021084548_2003f_1616210148_5.jpg)
இதையும் படிங்க: இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்