அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், பால் விற்பனை விலையைப் பழனிசாமி அரசு திடீரென லிட்டருக்கு ஆறு ரூபாய் வரை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. அதிலும் விலை உயர்வு குறித்த பால்வளத்துறை அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.
![பால் விற்பனை விலை உயர்வை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ammk dinakaran tweet about milk price hike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4164959_tweet.jpg)
ஆவினில் தலைவிரித்தாடும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்வதுடன், தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக செயல்படுத்தினாலே விற்பனை விலையை அதிகரிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்திதர முடியும். எனவே,பால் விற்பனை விலை உயர்வை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.