மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், அப்பகுதியில் திரண்டிருந்த பாஜக தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தவாறே நடந்துசென்றார்.
அதையடுத்து அவர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்ற உள்ளார்.
இதற்கிடையில் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை வந்தடைந்தேன்! தமிழ்நாட்டில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷா சென்னை வருகை: விமான நிலையத்தில் குவிந்த பாஜக தொண்டர்கள்!