மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அமித் ஷா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ரூ.67,378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதில், ரூ.380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டம், ரூ. 61,843 கோடி மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டிலான உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டிலான காவேரி கதவணை திட்டம், ரூ.900 கோடி மதிப்பீட்டிலான வல்லூர் பெட்ரோலியம் முனைய திட்டம், ரூ.1,400 கோடி மதிப்பீட்டிலான அமுல்லைவாயல் லூப் பிளான்ட் (Lube Plant) மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் திட்டம் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும் இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்தவர் பிடிபட்டார்!