ETV Bharat / city

மாநாடு படம்... சிம்புவை எங்க கொண்டுவந்துருக்கு பாத்தியா...

author img

By

Published : May 22, 2022, 8:55 PM IST

கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ”வெந்து தணிந்தது காடு” படத்தை அமேசான் பிரைம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

மாநாடு வெற்றி சிம்புவை எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பாத்தியா

சென்னை: சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து இவர்களது கூட்டணியில் தயாராகி இருக்கும் படம் ”வெந்து தணிந்தது காடு”.

இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதேபோல படத்தின் வியாபாரமும் தீவிரமடைந்துள்ளது. இந்த படத்திற்கான இந்தி மொழி உரிமம் ரூ.12 கோடிக்கும், இணையதள வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ரூ.13 கோடிக்கு விலை போனதாகவும், இதுவரை ஆன மொத்த வியாபாரம் சேர்த்து படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ.28 கோடிதான் என்கிறார்கள். மாநாடு படத்தின் வெற்றி சிம்புவை எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பாத்தியா என்று கோலிவுட்டில் வாய் பிளந்து நிற்கிறார்கள்.

இதையும் படிங்க: 'தளபதி 67' - உறுதிசெய்த லோகேஷ் கனகராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.