ETV Bharat / city

போலி ஆசிரியர்கள் நியமனம் - முதலமைச்சருக்கு புகார் மனு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தக் கூடாது என முதலமைச்சருக்கு பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு புகார் மனு அளித்துள்ளது.

teachers
teachers
author img

By

Published : Feb 24, 2020, 5:24 PM IST

இது தொடர்பாக, அனைத்துத் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ”தமிழ்நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், கல்லூரி இணைப்புக்கான ஆய்வுகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளன.

இதற்காக அனைத்து கல்லூரிகளிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் நோக்கம் ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி போன்றவற்றை ஆய்வுசெய்வதே ஆகும்.

இந்த நிலையில் தற்போது பல கல்லூரிகள், ஆசிரியர்கள் தேவை என விளம்பரங்கள் செய்கின்றன. விளம்பரங்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் பரப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலி விளம்பரங்கள் ஆகும். நேர்காணலுக்கு வரும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை மட்டும் கையகப்படுத்தி, ஆய்வின்போது அவர்களை வேலைக்கு அமர்த்தியது போல போலியாகக் கணக்குக் காட்டவே, இந்தச் சதி நடக்கிறது.

2018இல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறிய தகவலில், 80,000 போலி ஆசிரியர்கள் இருந்தனர். அப்படியானால் அவர்களில் சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும். 2020லும் இது தொடர்ந்தால் 10,000 போலி ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் கறுப்புப் பணமாக பதுக்கப்படும்.

ஆகையால் அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளிலும் ஆய்வுகளை முடிக்கும்வரை, எந்தக் கல்லூரியும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தக் கூடாது. வேலை காலி என்ற விளம்பரங்களைப் பரப்பக் கூடாது எனப் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேங்மேன் பணியிடங்களைக் கைவிடக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.