ETV Bharat / lifestyle

பால் விரதம் முதல் மிளகு விரதம் வரை..கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறைகளின் முழு விவரம்! - KANDHA SASHTI VIRATHAM 2024

கந்தசஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்? என்ன சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? போன்ற கந்தசஷ்டி விரதம் முறைகளை பற்றி தெளிவாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..

KANDHA SASHTI VIRATHAM 2024
கந்த சஷ்டி விரதம் 2024 (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 1, 2024, 2:21 PM IST

முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது, ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த சஷ்டிக்காக தான். ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சப்தமி வரையிலான ஏழு நாட்கள் இந்த விரதம் இருக்க வேண்டும். இந்த ஆண்டு நாளை (நவ.2) தேதி கந்தசஷ்டி துவங்குகிறது. இந்நிலையில், விரதம் இருக்கும் முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்..

விரதங்கள் கடைப்பிடிக்கப்படும் முறைகள்:

பட்டினி விரதம்: காலை, மதியம், இரவு என எதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளாமல் ஒரு சிலர் விரதம் கடைப்பிடிப்பார்கள். அதே போல, ஒரு சிலர், ஒரு வேளை உணவை மட்டும் உட்கொண்டு மீதம் உள்ள இரு வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். கடுமையான விரதம் மேற்கொள்பவர்கள், மூன்று வேளை உணவையும் தவிர்த்து எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். இவை தான் பட்டினி விரதம் என்றழைக்கப்படுகிறது.

பால் விரதம்: மிக முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த பால் விரதம். சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டுமே ஒரு டம்ளர் குடித்து விரதம் இருப்பார்கள்.

பாலும், பழமும் விரதம்: மூன்று வேளையும், முற்றிலுமாக உணவை தவிர்த்து பால் மற்றும் பழங்களை உட்கொள்வார்கள். உதாரணத்திற்கு, காலையில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு ஆப்பிள், இரவில் ஒரு மாதுளை பழத்துடன் ஒரு டம்ளர் பால் என இந்த விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.

இளநீர் விரதம்: கடினமான விரதங்களில் ஒன்று இந்த இளநீர் விரதம். ஒரு நாளைக்கு ஒரு இளநீர் மற்றும் குடித்து விரதம் இருப்பார்கள். இளநீரில் இருக்கும் வழுக்கையை எடுத்துக்கொள்ளலாம்.

மிளகு விரதம்: விரத முறைகளில் கடுமையான விரதமாக கருதப்படுவது இந்த மிளகு விரதம் தான். பால், பழம் என எந்த வகையான உணவையும் உட்கொள்ளாமல் வெறும் மிளகை மட்டும் உட்கொள்வது தான் இந்த விரதம். ஒவ்வொரு நாளும் ஒரு மிளகை அதிகரிக்க வேண்டும். முதல் நாளில் ஒரு மிளகில் தொடங்கி, இரண்டு மூன்று என 7வது நாளில் ஏழு மிளகை உட்கொண்டு விரதத்தை முடிப்பார்கள்.

உப்பில்லாமல் உண்பது: விரதம் கடைப்பிடிக்கப்படும் ஏழு நாட்களுமே உப்பு இல்லாமல் உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். காய்கறிகள், குழம்பு ஆகியவற்றை தவிர்த்து, உப்பு இல்லாமல் தயிர் சாதம், பால் சாதம் என ஒரு வேளைக்கு உண்பார்கள்.

காய்கறி விரதம்: ஒரு சிலர், அரிசி பருப்பு போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து, காய்கறி மற்றும் கீரை வகைகளை மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பார்கள்.

கவனிக்க வேண்டியவை: விரதம் இருக்கும் பலர், நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் உடலை வருத்திக்கொள்வார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை விரதம் இருப்பவர்கள் நினைவில் வைத்துக்கொண்டு, விரதம் இருக்கும் 7 நாளும் தாராளமாக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:

பூஜை பாத்திரம் பளபளக்க..'இந்த' பொடியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்!

தீபாவளி கொண்டாடியாச்சா! அப்டினா உடல் உறுப்புகளை தூய்மை செய்வது அவசியம்!

பொறுப்புத் துறப்பு: சஷ்டி விரதம் இருப்பவர்கள், தங்கள் உடலுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்க வேண்டும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் விரதத்தை தவிர்க்க வேண்டும். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.