ETV Bharat / state

சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கூடுதல் விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செய்தி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 2:24 PM IST

சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு வாரத்தில் 3 நாட்கள், சென்னை-ஆப்பிரிக்கா இடையே வாரத்தில் 4 நாட்கள் விமான சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவா, ஜெய்பூர், புனே ஆகிய பெருநகரங்களுக்கு புதிதாக தினசரி விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும், வதோரா நகருக்கு வாரந்திர விமான சேவையை, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு விமான சேவைகள்: தாய்லாந்து நாட்டின் கடற்கரைச் சுற்றுலா தளமான ஃபுகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமானத்தை தாய் ஏர் ஏசியா விமானம் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா நாட்டுத் தலைநகர் அடீஸ் அபாபாவுக்கு, சென்னையில் இருந்து இதுவரையில் வாரத்தில் 3 நாட்கள் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்திற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பும், அதோடு பயணிகள் கூட்டமும் அதிகமாக இருப்பதால் இப்போது இந்த விமானம், வாரத்தில் 4 நாட்கள் சென்னையில் இருந்து அடிஸ் அபாபாவிற்கு இயக்கப்படுகிறது. விரைவில் இந்த விமானம் தினசரி விமானமாக இயக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கேரள அரசின் உயரிய விருதுகள் அறிவிப்பு.. யார் யாருக்குத் தெரியுமா?

உள்நாட்டு விமான சேவைகள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சென்னை - கோவா - சென்னை மற்றும் சென்னை - ஜெய்ப்பூர் - சென்னை ஆகிய வழித்தடங்களில் இன்று முதல் புதிதாக தினசரி விமானத்தையும், சென்னை - புனே - சென்னை இடையே இன்று முதல் புதிதாக மற்றொரு தினசரி விமானத்தையும் இயக்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், குஜராத் மாநிலம் வதோராவிற்கு, சென்னை - வதோரா - சென்னை இடையே புதிதாக வாராந்திர விமான சேவையை தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் 4 புதிய உள்நாட்டு விமான சேவைகளும், சர்வதேச முனையத்தில் இரண்டு புதிய விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விமான பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.