ETV Bharat / state

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு - காவல்துறை தகவல்! - CHENNAI FIRECRACKERS CASE

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை, பட்டாசு (கோப்புப்படம்)
தமிழ்நாடு காவல்துறை, பட்டாசு (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 2:09 PM IST

Updated : Nov 1, 2024, 2:16 PM IST

சென்னை: நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். ஒருநாள் கொண்டாட்டத்திற்கு பட்டாசு வெடித்தாலும், அதன் காரணமாக ஒலியும், காற்றும் மாசு ஏற்படுகிறது.

காற்று, ஒலி மாசுவை குறைக்கும் விதமாக, தீபாவளி பண்டிகை தினத்தன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது வருகிறது.

இதையடுத்து தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க காலை 6:00 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்குமாறு காவல் துறை பொதுமக்களை அறிவுறுத்தி வருவதுடன், நீதிமன்ற உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.‌

இதையும் படிங்க: ஆதரவற்றோருடன் தீபாவளி; மகிழ்ச்சியில் திளைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது நேற்று சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக 347 வழக்குகள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைலாப்பூர் காவல் மாவட்டத்தில் 18 வழக்குகளும், பூக்கடை காவல் மாவட்டத்தில் 20 வழக்கு என சென்னை முழுவதும் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போல் ஆவடி காவல் மாவட்டத்தில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 1, 2024, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.