சென்னை: 90ஆவது விமானப்படை தினம் நேற்று (அக்-8) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து விமானப்படை தளங்களிலும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை தலைவர் ஏர் கமாண்டர் விபூல் சிங் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், காவல்துறை துணை ஆணையர்கள் ஜோஸ் தங்கையா, சிபி சக்கரவர்த்தி மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விமானப்படையில் பயன்படுத்தப்படும் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சாகசம் செய்யப்பட்டன. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அவற்றை கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:அடுத்த ஆண்டு முதல், பெண் அக்னி வீரர்களை அறிமுகப்படுத்த திட்டம் - விமானப்படை தளபதி