ETV Bharat / city

பண்டிகை விடுமுறைகளால் சென்னையில் அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம் - chennai flights

தசரா, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் பண்டிகை விடுமுறைகளால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

பண்டிகை விடுமுறைகளால் சென்னையில் அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்

author img

By

Published : Sep 26, 2022, 12:14 PM IST

சென்னை: அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக 4,500 ரூபாய் கட்டணம் தற்போது 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் செல்லும் விமான கட்டணம் 5 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் ரூபாய் வரையும் கொல்கத்தாவிற்கு 15,000 ரூபாயிலிருந்து 22,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேபோல் அகமதாபாத்திற்கு 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் வரையும், புனேவுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரையும், மும்பைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மதுரைக்கு 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூர் உட்பட பல நகரங்களுக்கு செல்லும் விமான கட்டனமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஜிட்டல் கடன் மோசடிகளில் இருந்து தப்பிக்க ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.