பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பாக இன்று, தமிழ்நாடு தனியார் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் பழனி, ” அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப்படிப்பிற்கான 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் நியமனத்திற்கு குறைக்கப்பட்ட வயது வரம்பை மீண்டும் 57 என நிர்ணயிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமன அதிகாரி அனுமதியுடன் உயர் படிப்பு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துகிறோம் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனவுகள் நிறைவேறட்டும் - நடராஜனை வாழ்த்திய ஸ்டாலின்