ETV Bharat / city

அதிமுகவின் பலவீனம் சங்பரிவாரின் வலிமைக்கு பயன்படுத்தப்படுகிறது- விசிக தலைவர் திருமாவளவன்

அதிமுகவின் பலவீனத்தை சங்பரிவார் தங்களை வலிமைபடுத்திக் கொள்ள பயன்படுத்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பலவீனம் சங்பரிவாரின் வலிமைக்கு பயன்படுத்தப்படுகிறது- விசிக திருமாவளவன்

author img

By

Published : Jul 11, 2022, 12:25 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த எஸ்.சி, எஸ்.டி, அரசு அலுவலர் நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேட்டியளித்த அவர் ‘அதிமுக தலைமை குறித்து அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும். அதிமுக பலவீனபடுவது, அதிமுக நலனை மட்டுமில்லாமல், தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அதிமுகவின் பலவீனத்தை சங்பரிவார்கள் தங்களை வலிமைபடுத்தி கொள்ள பயன்படுத்துவார்கள்.

அதிமுகவின் பலவீனம் சங்பரிவாரின் வலிமைக்கு பயன்படுத்தப்படுகிறது- விசிக திருமாவளவன்

தமிழ்நாட்டில் சங்கபரிவார் வலிமை பெறுவது பெரும் தீங்கை விளைவிக்கும். அமித்ஷா அண்மையில், அடுத்த இலக்கு தென்னிந்திய மாநிலங்கள் தான் என சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டை மனதில் வைத்து தான் பேசியிருக்கிறார். இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

சாதியின் பெயரால் பிளவுபடுத்துகிறார்கள், மதத்தின் பெயரால் பகைமையை வளர்க்கிறார்கள், வட இந்திய மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டவை, இப்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள் அதிமுக பலவீனப்படுவது அதிமுகவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதிமுக தலைவர்களுக்காக சொல்லவில்லை, தொண்டர்களுக்காக சொல்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஹைடெக் ஏற்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.