ETV Bharat / city

கோட் போடுவது ரீப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு: ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார் - நடந்து போவது ரிப்பீட்டு, கோர்ட்டு கழட்டுவது ரிப்பீட்டு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநாடு படத்தில் வரும் வசனம்போல, "கோட் போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு, கோட்-ஐ கழட்டுவது ரிப்பீட்டு என ஒரே வேலையை ரிப்பீட்டாக செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார்
ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார்
author img

By

Published : Nov 29, 2021, 6:32 PM IST

Updated : Nov 29, 2021, 6:58 PM IST

சென்னை: ராயபுரம், திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறயுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்படும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு செய்தார்.

சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் எழுச்சியோடு விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

இந்த எழுச்சியைப் பார்க்கும்போது அதிமுகவும், தோழமை கட்சிகளும் வெற்றி பெறும். இந்தத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியை வைத்து சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்.

மக்கள் படகுகள் மூலம் சென்று வருகின்றனர்

தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகச் செயல்படாமல் ஜனநாயக முறையில் செயல்பட்டால் நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றியைப் பெறும். சென்னையில் உள்ள 16 கால்வாய்களில் மாம்பழம் கால்வாய், ஓட்டேரி கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால், சென்னை மக்கள் வெள்ள நீரில் படகுகள் மூலம் சென்று வந்து அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரப்படாமல் இருப்பதாலும் சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார்

திமுகவினர் எங்களிடம் கேட்டு பணிகளை செய்யட்டும்

மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் ஒரு இடங்களில் ராட்சத இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.

இந்த மழைக் காலத்தில் திமுக விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும், மறுவாழ்வு மையத்தை எப்படி நடத்த வேண்டும் என திமுகவினர் எங்களிடம் கேட்டு மக்களுக்கு பணிகளைச் செய்யட்டும்” என்றார்.
மக்களுக்கு எதையும் செயல்படுத்தவில்லை

இதைத் தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் கோட் போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு, கோட்-ஐ கழட்டுவது ரிப்பீட்டு என மாநாடு படத்தில் வரும் வசனம்போல ஒரே வேலையை ரிப்பீட்டாக செய்து வருகிறார்.

இந்த ரிப்பீட்டு பணிகளையே முதலமைச்சர் தொடர்ந்து செய்து வருகிறார், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை" என்று ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: இந்திய அளவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; பயமே வருகிறது - ஸ்டாலினின் 'நம்பர் 1' அக்கறை!

Last Updated : Nov 29, 2021, 6:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.