அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். பயிர்கடன், நகைக் கடன் தள்ளுபடி, 6 இலவச சமையல் எரிவாயு, இல்லத் தலைவிக்கு மாதம் ரூ.1500, அரியர் மாணவர்கள் தேர்ச்சி, மருத்துவப் படிப்பில் தமிழ் வழி கல்வி கற்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு என அதிரடி அறிவிப்புகளை முன்னதாக அதிமுக அரசு அறிவித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனால் தற்போது வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்
- அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்
- விலையில்லா வாஷிங் மெஷின்
- மகளிருக்கு பேருந்து கட்டண சலுகை
- ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்
- அனைவருக்கும் சூரியமின் அடுப்பு
- ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா
- விலையில்லா கேபிள் டிவி இணைப்பு
- பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம்
- 9 முதல் 10ஆம் வகுப்பு வரை சத்துணவு
- அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் 200 மி.லி. பால்
- நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி
- கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை
- சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்
- கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
- கச்சத் தீவு மீட்கப்படும்
- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
- 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக அதிகரிப்படும்
- மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்
- பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும்
- மகப்பேறு விடுப்பு ஓராண்டு விடப்படும்
- பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை
- ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன்
- ஆண் வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களுக்கு ரூ. 2000 உதவித் தொகை
- கணவரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை
- வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி
- உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்
- கட்டணமில்லா ஓட்டுநர் உரிமம்
- ஏழை தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்