சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய குறைந்த நாட்களே கட்சிகளுக்கு அவகாசம் உள்ளன. எனவே கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க கட்சிகள் மிகத்தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்நிலையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம், கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 7 ஆம் தேதி முதற்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதற்கேற்ப மார்ச் 4 ஆம் தேதி ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
காலை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், மாலை வட தமிழகம், டெல்டா பகுதி மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது. அப்போது விண்ணப்பதாரர்கள் மட்டும் தனியாக வர வேண்டும் எனவும், விண்ணப்பித்த ரசீதை கையோடு எடுத்து வரவும் அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப்பங்கீடு இழுபறி!