ETV Bharat / city

அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு!

சென்னை: அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த 8,250 பேருக்கும் இன்று ஒரே கட்டமாக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

admk
admk
author img

By

Published : Mar 4, 2021, 12:20 PM IST

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 8,250 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது. அதிமுக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களான ஓபிஎஸ், இபிஎஸ், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மதுசூதனன், வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

எப்போதும் பல கட்டங்களாக நடைபெறும் அதிமுக வேட்பாளர் நேர்காணல், இம்முறை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. குறிப்பாக இரண்டு பகுதிகளாக இந்த நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் ஐந்து, ஐந்து மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு குழுவாக ஒருங்கிணைந்த நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே கட்டமாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்!
ஒரே கட்டமாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்!

காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணலின் முதல் பகுதியில், 7 குழுக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது அதிமுகவின் கட்சி ரீதியான 75 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. மாலை 3 மணிக்கு இரண்டாவது பகுதியாக 7 குழுக்கள் மற்றும் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலின் போது கட்டாய முகக்கவசம் அணிதல் மற்றும் செல்ஃபோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, நெல்லை, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை ,விருதுநகர், விருதுநகர், மேற்கு மாவட்டங்கள், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகியவற்றிற்கு நேர்காணல் முடிந்துள்ளது.

அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது‌‌..!

திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேர்காணல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும், பிற்பகலில் திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: அரசியலுக்கு வாங்க சின்னம்மா... சசிகலா வீட்டின் முன் தொண்டர்கள் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.