வேட்புமனுத்தாக்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கட்சிகள் உள்ளன.
வருகின்ற சட்டபேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் பாமக உடன் தொகுதி பங்கீடு நேற்று முன்தினம் (பிப்.27) கையெழுத்தான நிலையில், பாஜகவிற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை உறுதி செய்ய அதிமுக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்த பின் அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்த எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை காலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை, இதனால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
நேற்றைய தினம் காரைக்கால், விழுப்புரம் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்ப திட்டமிட்ட நிலையில் திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்றிரவு சுமார் இரண்டு மணி நேரம் சந்திப்பு நடைபெற்றதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால் விரைவில் அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; அமித் ஷா - முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு